317 Views

COVID-19 வைரஸ் பரவலின் காரணமாக உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள இவ் வேளையில் இலங்கை அரசின் துரித பாதுகாப்பு அடவடிக்கைகளின் காரணமாக இலங்கையில் மேலும் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்காவண்ணம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அந்த வகையில் கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளரின் பணிப்பிற்கமைய எமது பகுதியிலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இன்றைய தினம் கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தின் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களில் தொற்று நீக்கி இரசாயனம் விசிறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதார வைத்திய பரிசோதகர்களுடன் இணைந்து பொது மக்களுக்கான விழிப்பூட்டல் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

கிரான் கமநல சேவை நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம், ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், சந்திவெளி சமுர்த்தி வங்கி, சந்திவெளி திகிலிவெட்டைக்கு இடையிலான நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது இடங்களில் இன்றைய தினம் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டதோடு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நாசிவன்தீவு மற்றும் கிரான் பிரதேசங்களிலும் குடிநீர் வழமை போன்று வழங்கப்பட்டடு வருகின்றது.

இன்றைய இப்பணியில் பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர், சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.