463 Views

முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கிவைப்பு. கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித்தினால் சபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் பொருட் கொளவனவுகளில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு இந்த முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள ‘மீரா டெய்லர்’ தையற்கடையின் உரிமையாளரான எம்.எம். அரபாத் அவர்களினால் இலவசமாக கோறளைப்பற்று பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்காக தவிசாளரிடம் கையளிக்கப்பட்ட முகக் கவசங்களே இவ்வாறு பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று காரணமாக வர்த்தக நிலையங்களில் முகக் கவசங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனாலும், ஏலவே கோறளைப்பற்று பிரதேச சபையினால் சுகாதார ஊழியர்களுக்கான முகக் கவசங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் இவை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.