303 Views

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு Covid-19 வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

அதனடிப்படையில் இன்றைய தினம் (23.03.2020) கோறளைப்பற்று பிரதேசசபைக்குற்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை நடாத்தப்படுகிறது.

கல்குடா பொலிஸ் நிலையம், வாழைச்சேனை பஸ்தரிப்பு நிலையம், பேத்தாழை பஸ்தரிப்பு நிலையம், பாசிக்குடா சுற்றுலா பிரதேசங்கள், மற்றும் சந்தைத் தொகுதி போன்ற பொது இடங்களில் இந்த செயற்றிட்டம் கடந்த நான்கு நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சபையின் தவிசாளர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் அவர்களின் பணிப்பிற்கமைய இரசான திரவம் விசிறும் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதோடு வாழைச்சேனை சுகாதார வைத்திய அத்தியட்சகர் மற்றும் சுகாதார வைத்திய பரிசோதகர்களின் வழிகாட்டலில் இந்த செயற்றிட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.