149 Views

கொரோனா வைரஸால் நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் சிவனொளிபாத மலைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.

இலங்கை உலகின் பாதுகாப்பான தீவு என்றும், கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியாமை குறித்து அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவரை மட்டுமே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அரசியல் செயற்பாடு குறித்து தனக்கு எந்த வாதமும் இல்லை என்றாலும், நாட்டின் சட்டங்களை அவரால் தனியாக உருவாக்க முடியாது.

நாட்டின் அனைத்து தேசிய சக்திகளையும் இணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.